பக்கம்:காரும் தேரும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 41

யுணர்வுடன் நிற்றல், என்றும் ஆன்றோர் பொருள் கூறு வ1. அறிவிற் சிறந்த ஒளவைபிராட்டியார், கற்பெனப் படுவது சொல் திறம்பாமை' எனப் பொருட் பொருத்த முறக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நினைத்தற் குரியது.

பெரும்பாலான முல்லைத் திணைப் பாடல்கள் மனைவி, கணவன் வரவை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் ஆற்றியிருக் கும் ஒழுக்கம் பற்றி எழுந்தனவேயாகும். இதற்குச் சான்று களாகச் சில காட்சிகளைக் காண்போம்.

முல்லை நிலத்தில் பெருமழை பெய்தது. மண்ணில் வரிவரியாகக் கீறிவிட்டு நீரோட்டம் சென்றது. ஈர மணலைக் காட்டுக் கோழிகள் தம் காலால் கிளறிச் சிதறச் செய்தன. பசுக்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் காளை, பாம்புப் புற்றின் ஈரமான மேற்புறத்தினைத் தன் கூறிய கொம்புகளினால் குத்திக் ளெறுகின்றது. மண் பட்ட கொம்புகளோடு தன்னை விரும்பிய இளைய பசுவுடன் சேர்ந்து செம்மாந்த நடை யுடன் வீடு திரும்பி வரும் மாலைப் பொழுதில் மற்றப் பசுக்களும் தம் தம் கன்றுகளை அன்போடு அழைத்து, தம் மன்றம் புகுகின்றன. அது பொழுது, பசுக்களின் அழுத்தில் கட்டப் பெற்றிருக்கும் மணிகள் அழகுற ஒலிக் கின்றன, அவ்வொலி இனிய இசையாகி எங்கும் பரவு கின்றது. இக் கா ட் சி யி ፴፮) ፴፫ அழகுறு பாட்டாக அகநானுாற்றுப் புலவர் வெள்ளைக் கண்ணத்தனார் பித்திரித்துள்ளார். அப்பாடலின் பகுதி வருமாறு : -

、 கடுநீர் வரித்த செங்கில மருங்கின் விடுநெறி ஈர்மனல் வாரணம் சிதரப் பாம்புறை புற்றத்து ஈர்ம்புறம் குத்தி மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏன்று உடனிலை வேட்கையின் மடங்ாகுதjஇ ஊர்வயின் பெயரும்பொழுதின் சேர்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/43&oldid=554021" இலிருந்து மீள்விக்கப்பட்டது