பக்கம்:காரும் தேரும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 4.

    கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும் 
    ஆபூண் தெண்மணி ஐதியம்பு இன்னிசை.
                                      -அகநானூறு : 6 4 : 8-11

கார் காலத்தின் தொடக்கத்தில் இரவு முழுவதும் பெரு மழை பெய்தது. உழவர்கள் நன்கு காலைப்பொழுது புலர்ந்தவுடனே தத்தம் நிலங்களுக்குச் சென்று ஏர் பூட்டி உழுதனர். செம்மண் பூமியின் புழுதி மேலும் கீழும் சென்றிடுமாறு உழுதொழில் செய்தனர். பின்னர் வரகு விதைத்தனர்; விதைகள் முளைத்து மேலே தெரிந்தன. உழவர்கள் ஒலைக்குடையைத் தம் தலைமேற் பிடித்துத் தொழிலாற்றிய தோற்றம், கலைமான் கூட்டம் நிலமெல் லாம் பரந்து திரிந்த காட்சி போலக் காணப்பட்டது, ப)ை முழங்க, உழவர்கள் பயிர்களில் முளைந்திருந்த களையைப் பக்குவமாகக் களைந்தெறிந்தார்கள். களை கட்ட பின் வரகு மேலும் செழித்து வளர்ந்து விட்டது. கதிர்கள் இரண்டிரண்டாகப் பிளவுபட்டாற் போன்று காட்சி வழங்கின. அக் கதிர்களை மயில்கள் உண்டு, பின் தம் நில நிறத் தோகைகளைப் பரப்பிக் குருந்த மரக்கிளைகளில் கொலுவீற்றிருந்தன. அக் கிளைகளிலிருந்து மகிழ்ச்சியோடு அவை அகவிய ஒலி, கிளி கடியும் பெண்களின் குரல் ஒலி போல் இருந்தது. அத்தகைய கார்காலம் இது என்று பிறிதோர் அகநானூற்றுப் புலவர் இடைக்காடனார் அழகுற, நயம்பட வருணித்துள்ளார் :

    பேருறை தலைஇய பெரும்புலர் வைகறை 
    ஏர் இடம் படுத்த இருமறுப் பூழிப் 
    புறமாறு பெற்ற பூவல் ஈரத்து 
    ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால் 
    வித்திய மருங்கின் விதைபல நாறி 
    இரலை நன் மான் இனம் பரந்தவை போல் 
    கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர் 
    கறங்குபறைச் சீரின் இரங்க வாங்கிக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/44&oldid=1410889" இலிருந்து மீள்விக்கப்பட்டது