பக்கம்:காரும் தேரும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 43

களைகால் கழிஇய பெரும்புன வரகின் கவைக்கதிர் இரும்புறம் கது.உ உண்ட குடுமி நெற்றி நெடுமாத் தோகை காமர் கலவம் பரப்பி ஏமுறக் கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் கார்மன் இதுவால்...!

-அகநானுாறு : 194 : 1-1 6

முல்லை நிலம் கார்காலத்தில் கவினுற விளங்கிக் காட்சி யின் பம் வழங்குகின்றது. செறிந்த இலைகளையுடைய காயா மரம் அஞ்சனம் போன்ற நீல நிற மலர்களையும், 1வெந்தளிர்களைக் கொத்துக் கொத்தாக இட்டுத் பகான்றும் கொன்றை மரம் நல்ல பொற்காசு போன்ற பவர்களையும், வெண் காந்தளின் குவிந்த முகைகள் அழகிய பககள் போன்று மலர்ந்த மலர்களையும், இதழ் நிறைந்த கான்றி குருதி போன்ற செந்நிற மலர்களையும் மலர்வித்து பானம் பரப்பி நிற்கின்றன. இப் பூக்கள் பூத்துக் குலுங்கு

கால் செம்மண் பூமி பொலிவுற்றுக் காணப்படுகிறது.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை கன்பொன் காலக் கோடல் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கானம் நந்திய செங்கிலப் பெருவழி.

-முல்லைப் பாட்டு : 93-97

இவ்வாறு நப்பூதனார் என்னும் புலவர் முல்லை நிலத்தினை நயமுறக் கிளத்துகின்றார்.

கார்காலத்தின் தொடக்கத்தில் திரும்பி வருவேன் அன்று கூறிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/45&oldid=554023" இலிருந்து மீள்விக்கப்பட்டது