பக்கம்:காரும் தேரும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - காரும் தேரும்

காலமோ வந்து விட்டது. கார்கால முதல் மழையால் | முல்லைக் கொடி பூத்துக் குலுங்குகின்றது. அவ்வரும்புகள்! கார்காலத்தின் வெண்ணிறப் பற்கள் போலவும், கார்காலம், ! அப் பற்களைக் காட்டித் தலைவியைப் பார்த்து நகைப்பது போலவும் தோன்றுவதாக ஒக்கூர் மாசாத்தியார் என்னும்! பெண்பாற் புலவர் ஒரு பெண்ணின் ஆழ்ந்த மனத் துயரினைப் புலப்படுத்தியுள்ளார். -

பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லைத்

தொகுமுகை இலங்கெயி றாக

நகுமே தோழி நறுந்தண் காரே.

-குறுந்தொகை : 126 : 3-5

பிறிதொரு தலைவி, அம்முல்லைக் கொடியினை வாழ்த்தி, அதனை நோக்கி இரக்கத்துடன், சோர்வுடன், பின்வருமாறு வினவுகின்றாள்:

'உன் சிறு சிறு வெண்ணிற அரும்புகளால் என்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதுபோல் புன்முறுவல் காட்டு கின்றாய். கணவனைப் பிரிந்து தனித்துறையும் மகளிராம். எம்போன்றோரிடம் நீ இவ்வாறு செய்வதும் தகுமோ?' ' என்று கழிவிரக்கத்தோடு மெலிந்து வினவுகின்றாள்:

முல்லை வாழியோ முல்லை நீரின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை போலக் காட்டல்

தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

-குறுந்தொகை : 51

கார்காலத்தில் தலைவி மிகவும் ஆவலோடு எதிரி பார்ப்பது தலைவன் திரும்பி வரும் தேரோசையினையே ஆகும். பருவ மழை பெய்துவிட்டது; மயில்கள் மகிழ்ந்து ஆடுகின்றன; கொன்றை மலர்ந்து குலுங்குகின்றது. கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/46&oldid=554024" இலிருந்து மீள்விக்கப்பட்டது