பக்கம்:காரும் தேரும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 45

காலம் வந்து விட்டது. காலையில் நிலத்தில் விதைக்கச் சென்ற உழவர் முல்லைப்போதுகளோடு திரும்புகின்றனர்! ஆயினும் தலைவன் சென்ற தேர் திரும்பி வருகின்றது என்று என்னிடம் சொல்வார் இல்லையே' என்று நலிந்து வருந்து கின்றாள். தலைவி. -

முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்று ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரனிழிபு மாலை கனிவிருந் தயர்மார் * தேர்வரும் என்னும் உரைவா ராதே.

-குறுந்தொகை : 155

தலைவியின் ஆருயிர்த் தோழி அவளைத் தேற்றுகின் றாள். முல்லைப் பூக்கள் மலர்ந்தது பருவ மழையினால் அன்று; வம்ப மாரி-அதாவது புது மழையினாலாகும். இது | ண்மையில் கார் காலமானால் நம் தலைவர் தவறாது வந்திருப்பார். அவர் வராமையினாலேயே இது கார் காலம் அன்று என்பதனை நீ உணரவில்லையா?' என்கிறாள்:

தண்டுளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகைதலை திறந்த நாற்றம் புதல்மிசைப் பூவமல் தளவமொடு தேங்கமழ்பு களுல வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று கார் இது பருவம். ஆயின் வாரா ரோகம் காத லோரே?

-குறுந்தொக்ை : 382

இது கேட்டு, 'பொற்காசுகளைப் போல் கொன்றை மலாந்துள்ள தையும், குருந்த மலர்கள் மலர்ந்து அசைவதை பும், குளிர்ந்த காற்று வீசும் நிலையினையும் கண்டும் கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/47&oldid=554025" இலிருந்து மீள்விக்கப்பட்டது