பக்கம்:காரும் தேரும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - காரும் தேரும்

காலம் அன்று இது என்றால் நான் காண்பவை எல்லாம் கனவுதானோ என்று உன்னை வினவத் தோன்றுகிறது’’’ என்றாள் தலைவி.

காசின் அன்ன போதுஈன் கொன்றை * குருந்தொடி அலம்வரும் பெருந்தண் காலையும் கார் அன்று என்றி யாயின் *கனவோ மற்றிது வினவுவல் யானே.

-குறுந்தொகை : 14 8: 3-6

இவ்வாறு தலைவி தோழியிடம் கூறினும், தலைவன் தன்னிடம் சொன்ன சொல் பிறழாமல் உறுதியாக மீண்டும் திரும்பி வருவான் என்று நம்புகின்றாள்.

அம்ம வாழி தோழி காதலர் நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய சொல்புடை பெயர்தலோ இலரே.

-நற்றிணை : 289 : 1-3

தலைவியின் நம்பிக்கையின்படியே தலைவனும் தேர் ஏறி வீடு நோக்கி விரைந்து வருகின்றான். வரும் வழியில் ஆணும் பெண்ணுமாய் விலங்குகளும் பறவைகளும் கூடி வாழும் அன்பான காட்சியினைக் காணுகின்றான். இரலை ஆண்மான் ஒன்று தன் துணைவியையும் குட்டியையும் அன்புக் குரலால் கூவி அழைக்கின்றது. அம் மானைத் தன் பாகனுக்குக் காட்டி, வல்விரைந்து செல்க பாகநின் தேரே' என்கிறான். தன் தலைவியின் நிலையைக் கற்பனையில் காண்கிறான். தலைவர் இன்று வருவார் என்று சொல்' என்று கிளியிடம் இல்லவர் அறிதல் அஞ்சி மழலை மொழி பேசுகின்றாள் நாணுடைத் தலைவி.

செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி இன்றுவரல் உரைமோ சென்றி.சினோர் திறத்துஎன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/48&oldid=554026" இலிருந்து மீள்விக்கப்பட்டது