பக்கம்:காரும் தேரும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 47

இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை -- a

- -அகநானூறு : 34 : 14-16

இவ்வாறு தலைவியின் அன்பு நெஞ்சம் எண்ணி விரைந்து வீடு திரும்பும் தலைவனைக் கண்டு வீட்டில் உள்ள எல்லோரும் மகிழ்கிறார்கள். மாலை நேரம்: மனைவி, முன்றிலில் குறிய கால்களையுடைய கட்டிலில் தலைவன் அருகே உள்ளாள். ஆண் குழந்தை தலைவன் மார்பின்மேல் ஏறி ஊர்ந்து விளையாடுகின்றான். பாணன் யாழிலிருந்து எழுப்பும் இன்னிசை பொருத்தமாக அமைந்து எல்லோர்க். கும் மகிழ்ச்சி தருகின்றது. * > .

மாலை முன்றில் குறுங்காற் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்ககை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித்து அம்ம பாணனது யாழே.

- ஐங்குறு நூறு : 410

இவ்வாறு சங்ககாலப் புலவர்கள் முல்லை நிலத்தினை யும், தலைவியின் அன்பு நெஞ்சத்தினையும், தலைவனின் செய்வினை முடித்த செம்மல் உள்ளத்'தினையும் தம் அழியாத பாடல்களில் வடித்துத் தந்துள்ளார்கள். கார் கால மாலையில் தலைவனின் தேர் வரும் ஒலியே தலைவியின் நெஞ்சம் மகிழ்விக்கும் இன்னோசையாகும்.

o --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/49&oldid=554027" இலிருந்து மீள்விக்கப்பட்டது