பக்கம்:காரும் தேரும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மணிமேகலை உணர்த்தும்

அறம *

பதிவெழு வறியாப் பழங்குடி மேம்பட்ட பொதுவறு சிறப்புடைய நகரம் காவிரிப்பூம் பட்டினமாகும். ஆங்கு உயர்ந்தோங்கு சிறப்பின் ஒரு தனிக்குடியாய் விளங்கியது ஏசாச் சிறப்பின் மாசாத்துவான்குடி. அவன் தன் அருமைந்தன் மண்தேய்த்த புகழினான்; மதிமுக மடவார் தம் ஆயத்துக் கொண்டேத்தும் செவ்வேள்; இவனே கோவலன் என்னும் பெயரிய வணிகப் பெருமகன். இவன், புகார் நகரின் பெருஞ் செல்வனான மாநாய்கனின் மகள் கண்ணகியை மணந்தான். சிலவாண்டுகள் இல்லறம் இனிதே நடந்தது. பின்னர் ஊழின் வயத்தால் கோவலன் வடுநீங்கு சிறப்புடைய தன் மனையகம் மறந்து ஆடல் பாடல் அனைத்தும் பயின்று அழகரசியாகவும், கலையரசி யாகவும் விளங்கிய மாதவியின்பால் மனம் சென்று மயங்கித் தீராக் காதலால் கண்ணகியைத் துறந்தான். அந்தக் காதலின் பயனாய்த் தோன்றிய கனியே மணிமேகலை. கோவலன் முன்னோன் வணிகப் பொருள்களுடன் கடலிற் கலம் செலுத்த அப்பொழுது அக்கலத்திற்கு ஊறுபாடு ஏற்பட, தான் வழிபடும் கடவுளாம் மணிமேகலா தெய்வத்தை நினைக்க, அவ் ஊறுபாடு அ. க ன் ற து . எனவே கோவலன் இந் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து, தனக்கும் மாதவிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/50&oldid=554028" இலிருந்து மீள்விக்கப்பட்டது