பக்கம்:காரும் தேரும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உணர்த்தும் அறம் 49

பிறந்த மகளுக்கு மணிமேகலை என்ற பெயர் சூட்டினான்.

மணிமேகலைக் காப்பியம் சிலப்பதிகாரக் கதையோடு தொடர்பு பெற்றது. மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்ற சிலப்பதிகார இறுதி அடிகள் இதனை வலியுறுத்தும். மணிமேகலைக் காப்பி பத்தின் தலைவி மணிமேகலை ஆவள். இக் காப்பியத்தினை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் ஆவர். தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்

பட்ட மணி ேம க ைல என்று தம உரையிற் குறிப்பிட்டுள்ளனர்.

சேரன் செங்குட்டுவனுக்குக் க ண் ண கி யி ன்

வரலாற்றினையும் கற்புமேம்பாட்டினையும் எடுத்து மொழிந்தவர் இவரே. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றுவதற்கு வேட்கை விளைவித்தவரும் இவரே ஆவர். இவர் பெயர் சாத்தனார் என்றும் சீத்தலைச் சாத்தனார் என்றும் கூலவாணிகன் சாத்தனார் என்றும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்றும் வழங்கும். சிலப்பதிகாரப் பதிகம் இவரைத் தண்டமிழ்ச் சாத்தன் (அடி 10) என உரைக்கும்; சிலப்பதிகாரக் காட்சிக் காதையில் இவர் 'கண்டமிழாசான் சாத்தன்' என்றும், நன்னூற் புலவன் என்றும் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

திருக்குறளாசிரியர் திருவள்ளுவர் பெருமானிடத்து இவர் மதிப்பும் மரியாதையும் உடையவர். இதனை இவர்,

தெய்வங் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.

-திருக்குறள் 55

பாய குறளினை அப்படியே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/51&oldid=554029" இலிருந்து மீள்விக்கப்பட்டது