பக்கம்:காரும் தேரும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காரும் தேரும்

தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

-மணி ; 2 2 : 59.61

என்று பெய்துள்ளார். மேலும், கேள்வியாற் கேட்கப் படாத செவி என்ற குறட்பகுதியினை மனத்துட் கொண்டு "கேள்வியாளரிற் றோட்ட, செவியை நீ யாகுவை: (17 : 1.34-135) என்று குறிப்பிட்டுள்ளார்.

==

முற்பகல் செய்தது பிற்பகல் விளையும் என்றபடி, இவர் ஊ ழ் வி ைன ைய ச் சிலப்பதிகார ஆசிரியர்

இளங்கோவடிகளைப் போலவே உறுதியாக நம்பினார் என்பதனைச் சோழ மன்னன் மாவண்கிள்ளியின் மகன் உதயகுமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால்

விெட்டுண்ட செய்தியினைக் கூறுமிடத்து,

ஆங்கவன் தீவினை உருத்த தாகலின் மதிமருள் வெண்குடை மன்ன னின்மகன்

உதய குமர னொழியா னாக -மணி : 22: 193-195

என்றும்,

மடையனை, உடற்றுணி செய்தாங் குருத்தெழும் வல்வினை நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே -மணி : 23 : 82-85

■ 暉 ■ ■ ■ என்றும் கூறுவதனால் நன்கறியலாம். --

இந்நூலாசிரியர் இயற்றிய மணிமேகலை என்னும் இந் நூல் ‘மணிமேகலை துறவு என்றும் வழங்கும் என்பது ‘மணிமேகலை துறவு ஆறைம் பாட்டினுள் அறிய வைத் தனன் என்ற பதிகத்தின் இறுதியடிகள் கொண்டு உணர லாம். இந்நூல் பெளத்த சமயச் சார்பினளாக மணிமேகலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/52&oldid=554030" இலிருந்து மீள்விக்கப்பட்டது