பக்கம்:காரும் தேரும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உணர்த்தும் அறம் 51

யின் வரலாற்றினை விரித்துரைப்பதால் பெளத்த சமயக் கொள்கைகளை நூலின் கண்.பரக்கக் காணலாம். பெளத்த தருமங்கள் பல இந்நூலிற் கிளத்தப்படுகின்றன. இனி மணிமேகலை உணர்த்தும் அறக்கருத்துகளைக் காண்போம்.

பெண் சிறந்தவளாகவும் தூயவளாகவும் இருந்தால் தான் இல்லத்தில் அமைதி நிலவும், மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் என்பதனைச் சாத்தனார் நன்குணர்த்துகின்றார். , இந்திர விழாவில் மணிமேகலை நாட்டியம் ஆடமாட்டாள் என்பதனை எடுத்துக் கூறும்பொழுது தன் மகள் மணிமேகலையைக் கற்புக்கரசி கண்ணகியின் மகள் என்றே மாதவி குறிப்பிடுகின்றாள். தன் மகள் மதுரை மாநகரைத் நீக்கிரையாக்கிய மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள் என்று மாதவி குறிப்பிடும் கூற்றில் ஒரு செருக்குக் காணப் படுகின்றது. இதனைப் பின்வரும் மணிமேகலையின் அடிகள் உணர்த்துகின்றன. = -

காவலன் பேரூர் கனையெரி மூட்டிய மாபெரும் பத்தினி மகண்மணி மேகலை அருந்தவப் படுத்த லல்ல தியாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்.

-மணிமேகலை : 2 : 54-57

இவ்வாறு கூறிப் பத்தினிப்பெண்டிரின் இயல்புகளை யும் எடுத்துரைக்கின்றாள். பத்தினிப் பெண்டிர் தங்கள் காதலர் இறந்தால் உலையிலுாதும் துருத்தி மூக்கைப் போலவே அழலெழ வுயிர்த்து, நெருப்பு மூட்டி அதில் விழுந்து, தங்கள் ஆருயிரினை விட்டுவிடுவர். அந்நெருப்பு அவர்களுக்கு குளிர்ந்த நீருடைய குளம் போலத் தோன்றும். அவ்வாறு அவர்கள் இறக்கவில்லை யென்றால் கைம்மை நோன்பு நோற்றுத் தங்கள் உடம்பை வருத்திக் கொள்வார் கள். இக் கைம்மை நோன்பினை சிலப்பதிகாரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/53&oldid=554031" இலிருந்து மீள்விக்கப்பட்டது