பக்கம்:காரும் தேரும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காரும் தேரும்

இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்

-சிலப்பதிகாரம்: 18: 34-35

என்று குறிப்பிடுகின்றது. கைம்மை நோன்பின் வருத்தத் தினைப் பூதப்பாண்டியன் பெருந்தேவி புறநானூற்றுப் பாடலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

வெள்ளெட் சாத்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெங்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்றி வதியும் உயவற் பெண்டிர்.

-புறநானூறு: 24 6: 7-10

எள்ளுப் புழுக்க்ையுடன், வெந்த வேளைக் கீரையை உண்டு பாயில்லாமல் தரையிற் படுத்துறங்கித் துன்புற்று வாழ வேண்டும் என்று இப்பாடற் பகுதி கைம்மை நோன்பின் துன்பத்தினை உணர்த்துகின்றது. இவ்வாறு துன்பப் படாமல், தம் அரும்பெறற் கணவரை எரியூட்டிய நெருப் பிலேயே மனைவியர் விழுந்து தமமுயிரை மாய்த்துக் கொள்வார்களேயானால் அத்தகைய பத்தினிப் பெண்களுக்கு அவ் ஈமத்தீயும் குளிர் பொய்கையகத் தோன்றும் என மேலும் கூறுவர் பூதப்பாண்டியன் தேவி.

பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற

வள்ளிதழ் அவிந்த தாமரை

கள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே.

-புறநானூறு: 246 : 1.3 - 15

பத்தினிப் பெண்டிரினும் மாறுபட்ட வாழ்க்கையுடைய பொதுப் பெண்டிரின் புன்மை வாழ்க்கையினைச் சித்திரா பதியின் கூற்றால் சாத்தனார் பெற வைக்கின்றார். மணிமேகலை பிக்குனிக் கோலங்கொண்டு அமுதசுரபி யென்னும் அட்சயபத்ேதிரமேந்தி உலகவறவியிற் சென்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/54&oldid=554032" இலிருந்து மீள்விக்கப்பட்டது