பக்கம்:காரும் தேரும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உணர்த்தும் அறம் 53

என்பதனைக் கேட்ட மாதவியின் தாய் சித்திராபதி மனங் கலங்கி, மாழ்கி மயங்கி, மணிமேகலையைத் துறவுக் கோலத்தினின்றும் துறக்க வைப்பேன் என்றாள். பின் நாடகக் கணிகையரைப் பார்த்து, கோவலன் இறந்தது கேட்டு மாதவி தன் வாழ்வைத் துறந்து அறவண அடிகளி டம் அறவுரை கேட்டுத் தவமேற் கொண்டொழுகுதல் நகைக்கத் தக்கது: கணவனோடு இறக்கும் பத்தினிப் பெண் வின் மரபில் வரவில்லை அவள். பாணன் இறந்தபொழுது அவனுடன் இறவாத யாழைப் போல்வேம் யாம்; பூவின் மகரந்தத்தை உண்டு அது தீர்ந்தபின் அப் பூவினைத்துறக் கும் வண்டு போன்ற வாழ்வே பரத்தையர்க்கு ஒத்த வாழ்வு' என்றும் விளங்க எடுத்துரைத்தாள்:

விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான் கூத்தியன் மடந்தையர்க் கெல்லாங் கூறும் கோவலன் இறத்தபின் கொடுங்துய ரெய்தி மாதவி மாதவர் பள்ளியு ளடைந்து நகுதக் கன்றே கன்னெடும் பேரூர் இதுதக் கென்போர்க் கெள்ளுரை யாயது காதலன் வியக் கடுந்துய ரெய்திப் போதல் செய்யா வுயிரோடு புலந்து

ாளியிரும் பொய்கை யாடுகர் போல முளியெரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம் கைத்துரண் வாழ்க்கை கடவிய மன்றே பாண்மகன் பட்டுழிப் படுஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந்தா துண்டு கயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்.

-மணிமேகலை: 18: 4- 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/55&oldid=554033" இலிருந்து மீள்விக்கப்பட்டது