பக்கம்:காரும் தேரும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உணர்த்தும் அறம் 55

இதனோடு,

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் * = திருக்ேகப் பட்டார் தொடர்பு * *

. . . . -திருக்குறள்: 92.0 என்னும் குறளை ஒப்பிட்டுக் காண்க : - *

காமவுணர்வின் ஆற்றலினைத் o தவ ■° மேற்கொண் டொழுகும் தன்மையினளாம் மணிமேகலையின் வாய் மொழி கொண்டே சாத்தனார் வற்புறுத்திக் கூறுகின்றார். உவவனத்தில் மணிமேகலை உள்ளாள் என்பதனை அறிந்த உதயகுமரன் தேரேறி உவவனம் நோக்கி விரைந்து வரு கின்றான். இதனைத் தன் தோழி சுதமதியால் அறிந்த மணிமேகலை பளிக்கறைக்குள் ஒளிந்து கொண்ட்ாள். ஆங்குப் போந்த உதயகுமரன் சுதமதியை நோக்கி மணி மேகலையின் இருப்பிடம் வினவுகின்றான். மணிமேகலை உதயகுமரன் குரல்கேட்டுக் காமவுணர்வு கொள்கிறாள். உதயகுமரனோ மணிமேகலையை இழித்துப் பேசிச் சித்திரா பதியின் உதவியுடன் அவளை அடைவதாகக் கூறிச் செல்கிறான். அவளைப் பழித்துப் பேசுங்காலையில், மணிமேகலை கற்பற்றவள் என்றும், தவ உணர்வு அற்றவள் என்றும், பரத்தையர் குடிவந்தவள் என்றும் பலவாறு பழித்துக் கூறுகின்றான். அது கேட்டும் மணிமேகலையின் நெஞ்சம் அவனை வெறுக்காமல், மாறாக விரும்புகின்றது.

கற்புத் தானிலள் கற்றவ வுணர்விலள் வருண்க் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்று இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது = ** – புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் இதுவோ அனான்ய்ை காமத் தியற்கை. :

- --மணிமேகலை : 5 86-90 இவ்வாறு காமத்தின் வன்மையினை மணிமேகலைக் காப்பியம் தவ மங்கையின் மனப்போராட்டத்தின் வழி உணர்த்துகின்றது. - . . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/57&oldid=554035" இலிருந்து மீள்விக்கப்பட்டது