பக்கம்:காரும் தேரும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காரும் தேரும்

மணிமேகலை உணர்த்தும் மற்றொரு சீரிய கருத்து, பற்றே துன்பங்கள் பலவற்றிற்கும் காரணம் என்பதாகும். பிறந்தவர் துன்பம் அடைவர் என்றும், பிறவாதவரே இன்பநிலை எய்த முடியும் என்றும் சாத்தனார் குறிப் பிடுகின்றார்.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக. -மணிமேகலை : 2: 64-67

-

இவ்வடிகளோடு,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார் -திருக்குறள்: 10

என்ற குறளும்,

பற்றுக பற்றற்றான் பற்றிளை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

-திருக்குறள் : 350

என்ற குறளும் ஒப்பிட்டு நோக்கத் தக்கன.

மக்கள் வாழ்க்கையின் புன்மையினை நோக்கினல் அறநாட்டம் ஏற்படும் என்பது துணிபு. வினையால்,

உடம்பு தோன்றுகின்றது; வினைக்கு உடன் படுகின்றது.

முதுமையும் நோயும் பற்றும் உடம்பினைக் குற்றேவல்

- - * . . - o ". . . - o -- - கொள்கின்றன: o is a

o

- -

- o 1. * * * *- : *- . . . * - * * * * *- *** - - -i. -

வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் --

S S S S S S S S S ST S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

மக்கள் யாக்கை யிது. -மணிமேகலை :4 : 1.13-121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/58&oldid=554036" இலிருந்து மீள்விக்கப்பட்டது