பக்கம்:காரும் தேரும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. மணிமேகலை உண்ர்த்தும் அறம் 57

இவ்வுலகில் பரமார்த்த தத்துவ ஞானிகள், கள், பொய், களவு, கொலை, காமம் ஆகிய ஐந்தினையும் நீக்குபவர் களையே நிறைதவமுடைய நெஞ்சினர் என்று கொள்வர் என்று சாத்தனார் விழுமிய வாழ்வு .ெ ந றி யி ைன வற்புறுத்துகின்றார் : *

முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப் பட்டன வைந்துள அவற்றில் கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும் தள்ளா தாகும் காமம் தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிங்தோரென நீங்கின ரன்றே கிறைதவ மாக்கள் நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்கா நரகத் தன்னிடை யுழப்போர்.

--மணிமேகலை : 22: 169-176

இளமை இவ்வுலகில் ஒருநாளும் நிற்பதில்லை; யாக் கைக்கு முடிவுண்டு, அறத்திற்கு அழிவில்லை. இக்கருத் தினை மணிமேகலை ஆசிரியர் பலவிடங்களில் வற்புறுத்து கின்றார் என்பதனை,

-in- -1 பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலு முடையது இடும் பைக் கொள்கலம் மக்கள் யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்.

-மணிமேகலை 1 8 : 1.3 6-13 9

-

என்றும், ് ി, : "

இளமையும் நில்லா யாக்கையும் கில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் கில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது

-மணிமேகலை 22 : 1.3 5-139

என்றும் குறிப்பிடுவதனின்று அறியலாம். , , , o,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/59&oldid=554037" இலிருந்து மீள்விக்கப்பட்டது