பக்கம்:காரும் தேரும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காரும் தேரும் - - -

இதுபோன்றே உதயகுமரன் இறந்தது கேட்டு இராச மாதேவி பெருந் துயரங் கொள்கிருள். அதனால் தன் மகன் வெட்டப்படுவதற்குக் காரணமாக இருந்த மணி மேகலையை வெறுக்கிறாள். அதன் விளைவாக அவளுக்குப் பல இடுக்கண்களைச் செய்கின்றாள். தவத்தின் பெற்றி யால் மணிமேகலையை அத்தீவினைகள் யாதும் புரிய வில்லை. மகன் இறந்த வருத்தத்தில் மூழ்கிக் கிடந்த இராசமாதேவியை மணிமேகலை கண்டு உதயகுமரனின் உடலுக்கு அழுகின்றனையா? அல்லது உயிருக்கு அழுகின் றனையா? உடல் பொருட்டு அழுவாயேயாயின் அவ்வுட லினைச் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்தவர் யார்? உயிரின் பொருட்டு அழுவாயே யானால் அந்த உயிர் அழிந்துவிடவில்லை; வேறோர் உடலில் இப்பொழுது புகுந்துலவுகின்றது, எனவே உலகின் உயிர்களுக்கெல்லாம் இரங்கி அன்பு செய்தால் அவ்வுயிர்களில் ஒன்று உதய குமரனுடையதாக அமையலாம்' என்று கூறி மணிமேகலை இராசமாதேவியைத் தெருட்டி அன்பு அருள் ஆகிய உயிர்ப் பண்புகளின் மேன்மையினை எடுத்துரைத்தாள் :

உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே உயிர்க்கழு தனையேல். உயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையால் தெளிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காகினும் இரங்கல் வேண்டும்.

| - -மணிமேகலை: 23: 73–79

இளமை அழியும் என்பதனை நரை மூதாட்டி ஒருத்தி யைக் காட்டி மணிமேகலை உதயகுமரனுக்கு உணர்த்தினள் என்று சாத்தனார் கூறுவர். . - - - o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/60&oldid=554038" இலிருந்து மீள்விக்கப்பட்டது