பக்கம்:காரும் தேரும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உணர்த்தும் அறம் 59

மேலும்,

உறங்குவது மேலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு -திருக்குறள்: 339 என்று குறள் கூறும் கருத்தினையே சாத்தனாரும்,

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும் அல்லறஞ் செய்வோர் அருங்ரகு அடைதலும் - — மணிமேகலை : 16: 86–8 9.

- o ---

o

என்ற அடிகளில் புலப்படுத்துகின்றார்.

இறுதியாக, மணிமேகலை உணர்த்தும் பேரறமாக எண்ணத்தக்கது பசிப்பிணி யொழியப் பாடுபட வேண்டும் என்னும் உயரிய கோட்பாடே யாகும். முதலாவது விழா வறை காதையிலேயே பசியும் நோயும் பகையும் நீங்கி வள மையும் வாழ்வும் தழைக்க வேண்டுமென நகர மக்கள் அணி விழா எடுக்கின்றனர்: - I -- o

- -

பசியும் பிணியும் பகையும் நீங்கி - வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி.

-மணிமேகலை: 1: 70-71

உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு’ என்ருர் வள்ளுவர். அற்றார் அழிபசி நீர்த்தல் தலையாய அறமாகக் கருதப்படும். 'பசிப்பிணி வந்துற்றால் அது மேலாம் குடிப்பிறப்பினை அழிக்கும்; விருப்பத்தினை ஒழிக்கும்; கல்வியினைக் கைவிட வைக்கும்; நாணத்தை நீக்கும்; அழகை அலங்கோலமாக்கும்; மனைவி யோடு பிறர் கடைவாயிலில் சென்றிரக்கச் செலுத்தும். அப் பசிப்பிணியினைத் தீர்த்தோர் பெருமை நாவால் சொல்லி இயலாது. இவ்வாறு பசிக்கொடுமையினைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/61&oldid=554040" இலிருந்து மீள்விக்கப்பட்டது