பக்கம்:காரும் தேரும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 _ காரும் தேரும்

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம் நாணணி களையும் மானெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி; அது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது.

-மணிமேகலை 11: 76-81

எனவே ஆற்றா மாக்களின் அரும்பசி களைந்து வாழும் மெய்ந்நெறி வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கையாகும்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.

-மணிமேகலை 11 95-96

பசிப்பிணி தீர்க்கும் இப் பேரறத்தினைச் சாத்தனார் அறவணர்த் தொழுத காதையிலும் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தேவர் ஆகிய இருபகுதியினர்க்கும் உயரிய அறமாக விளங்கும் ஒன்று பசிப்பிணி தீர்த்தல் என்றி ஒன்றேயாம் என்று வன்மையுடன் வற்புறுத்துகின்றார்:

மக்கள் தேவர் எனவிரு சார்க்கும் ஒத்த முடிவின் ஒரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர்.

-மணிமேகலை: 12: 1.16-119.

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதையில், சாத்தனார் அறத்திற்கு இலக்கணமே (definition) கூறியுள் &тлггѓ. அறமெனப்படுவது உலக உயிர்களுக்கெல்லாம் உண்டி, உடை, உறையுள் முதலியவற்றைத் தருதலாகும் என்று நயமுற நவின்றுள்ளார்: - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/62&oldid=554042" இலிருந்து மீள்விக்கப்பட்டது