பக்கம்:காரும் தேரும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உணர்த்தும் அறம் 61

அறனெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்

-மணிமேகலை: 25: 228-231

+ -

o

தெள்ளு தமிழ்ப் புலவர் திருவள்ளுவரும்,

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் . தொகுத்தவற்று ளெல்லாங் தலை. -

  • - --திருக்குறள்: 322 என்றார்.

இவ்வாறு தண்டமிழாசான் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் தலையாய அறங்கள் பலவற் றினை வற்புறுத்தியுள்ளார். அவற்றுள் கள், பொய், களவு, கொலை, கர்மம் ஆகிய ஐந்தினைக் கடிதல் வேண்டும் என்றும், இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையாமை யுடையன என்றும், பரத்தையர்தோள் தோய்தல் அடாது என்றும், எல்லா அறத்தினும் மேம்பட்டது பசிப்பிணி போக்குதலே என்றும் பொருந்தக் கூறியுள்ளார். மணி மேகலை உணர்த்தும் அறப் பண்புகள் நாட்டில் மிகுந்தால் நாடு வலிவும் வனப்பும் பெற்றுப் புதுப் பொலிவுடன் பீடுடன் பிறங்கும் என்பது ஒருதலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/63&oldid=554044" இலிருந்து மீள்விக்கப்பட்டது