பக்கம்:காரும் தேரும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இலக்கியத்தில் தமிழ்நாடு

மரம் முந்தியதா? விதை முந்தியதா? என்ற ஆராய்ச்சி முற்றுப் பெறா ஒன்று. இது போன்று கவிதை முந்தியதா? உரைநடை முந்தியதா? என்கிற கேள்வியும் அது குறித்துக் கருத்து வேறுபாடும் உண்டு. ஆயினும் இலக்கியம் முந்தி யதா இலக்கணம் முந்தியதா என்ற கேள்விக்கு இடமே யில்லை. ஏனெனில் இலக்கியத்திலிருந்து இலக்கணம் எழு கின்றது என்பதனை நம் முன்னோர் அறுதியிட்டுக் குறிப் பிட்டுச் சென்றுள்ளனர்.

எள்ளினின்று எண்ணெய் எடுபடுவது போல இலக்கியத் தினின்றும் எடுபடுவது இலக்கணம்

என்ற செய்யுள் இவ்வுண்மையினை நன்கு உணர்த் தும். தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம் என்பது யாவரும் அறிந்த உண்மை. தொல்காப்பிய நூலாசிரியராம் தொல்காப்பியனார் தம் நூலின்கண் அவர் காலத்திற்கு முன்னர் நிலவிய இலக்கியத்திற்கு மரபு கூறுகின்றார்; இலக்கணம் கூறுகின்றார். இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின் உண்மை இதனால் நமக்குத் தெற்றெனப் புலனாகின்றது. மேலும் தொல்காப்பியனார்,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்

-தொல்காப்பியம்: அகத்திணை இயல்: 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/64&oldid=554046" இலிருந்து மீள்விக்கப்பட்டது