பக்கம்:காரும் தேரும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் தமிழ் நாடு 63

என்று தமக்கு முற்பட்ட இலக்கிய மரபினைச் சுட்டிக் கூறியுள்ளார். ஆயினும் தொல்காப்பியத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்கள் இதுகாறும் நமக்குக் கிடைத்தில. இன்று நம்மிடையே இலங்கும் இலக்கியங்களில் காலத் தாலும் கருத்தாலும் கவினுறச் சிறந்து மிளிர்வன நம் தங்கத்தமிழில் எழுந்த பங்கமில்லாச் சங்கத் தமிழ் இலக் கியங்களேயாகும்.

நம் தாய்மொழி தழிழ். தமிழ் என்ற சொல்லினை த் தொல்காப்பியனாரே ஆண்டுள்ளார்.

தமிழென் கிளவியும் அதனே ரற்றே. -

-தொல்காப்பியம். எழுத்து : புள்ளிமயங்கு 90

மேலும், பண்டைக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தமிழ்மொழி வழங்கிய நிலத்தினத்ை தமிழகம், தமிழ்நாடு என்று வழங்கினர். தமிழ் மண்ணைக் குறிக்கும் தமிழ்நாடு, தமிழகம் என்ற இ ச் சொற் கள் சங்க இலக்கியங்கள் தொடங்கி இற்றை நாளில் எழும் இலக்கியங்கள் வரை பயின்றுவரக் காணலாம். அவ்வக் காலத்தில் எழுந்து இலக்கியங்களில் தமிழ்நாடு' என்ற பெயர்க் குறிப்பு எவ்வெவ்வாறு இனிமையுறக் கிளத்தப்பட்டுள்ளது என் பதனைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியனார் பொருளதிகாரத்தில் செய்யுளியலில் யாப்பைப் பற்றிக் குறிப்பிட வந்தவிடத்து,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்

-தொல்காப்பியம் : செய்யுளியல் :79

என்று தமிழ் நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடி களுக்கு உரை எழுதிய பேராசிரியர், மூவரெனப்படுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/65&oldid=554048" இலிருந்து மீள்விக்கப்பட்டது