பக்கம்:காரும் தேரும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காரும் தேரும்

தமிழ்நாட்டு மூவேந்தருமாயினார் நாற்பெயரெல்லை யகமென்பது தமிழ்நாடென்றவாறு’ என்றும் குறிப்பிடு வதோடு, தமிழ்நாட்டார் வழங்கும் மரபுப் பகுதி அவை யென்வே யாப்பும் மரபுங் கருதியதாயிற்று, இச்சூத்திர மென்பது இதனாற் பெற்றாம் என்றும் குறிப்பிட்டுள் ள்தனை நோக்க, தமிழ்நாடு’ என்ற சொல்லினை அவர் விளங்கக் கையாண்டுள்ளார் என்பதனை அறியலாம்.

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய தொல்காப்பி யனாரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம் பாரனார்,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு கல்லுலகத்து

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடும் பொழுது தமிழ் நாட்டினைத் தமிழ்கூறு நல்லுலகம் என்ற சொல் லால் சுட்டிக் கூறியுள்ளார்.

நாடு, அகம், வரைப்பு, புலம். எல்லை முதலிய சொற் கள் ஒரு பொருள் குறித்த பல சொற்களாம்.

  • , எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து என்னும் நூலின் இரண்டாம் பத்தின் பதிகம்,

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் கிறீஇத் தகைசால் சிறப்பொடு

என்று தமிழ் நாட்டைத் 'தமிழகம்' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது.

- 1 - * → -----

- * * * o

பரிபாடல் திரட்டின் 8வது பாடல் வருமாறு :

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டக மெல்லாம்

நின்று கிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்று த லுண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு. to

= -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/66&oldid=554050" இலிருந்து மீள்விக்கப்பட்டது