பக்கம்:காரும் தேரும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் தமிழ்நாடு 65

ஈண்டு, தமிழ் நாடு’ என்ற சொல்லே வந்திருப்பது நோக்கத்தக்கதாகும். -- " - on

புறநானுாற்றில் பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார், s

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற வையக வரப்பில் தமிழகம் கேட்பப் பொய்யாய்ச் செங்கா நெளிய வேத்திப் பாடுப வென்ப பரிசிலர் நாளும்

-புறநானுாறு : 198 :17-20

என்று பரிசிற்றுறையாகப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இப்பகுதிக்குப் புறநானுாற்றின் பழைய உரைகாரர் கையான் வழங்கும் வள்ளிய கொடியினையும் கடிய குதிரையையுமுடைய கொற்ற: உலகத் தெல்லையுள் தமிழ் நாடு கேட்கப் பொய்யாத செவ்விய நாவருந்தும்படி வாழ்த்திப் பாடுவரென்று சொல்லுவர்பரிசிலர் நாடோறும் என்று உரை எழுதியுள்ளமை உன்னி மகிழ்தற்குரியது.

பத்துப்பாட்டின் ஆருவது பாட்டான் மதுரைக் காஞ்சியில், * - -

தென்னவன் பெயரிய துன்னருக் துப்பின்

-மதுரைக்காஞ்சி : 40

என்ற தொடருக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர், 'இராவணனைத் தமிழ்நாட்டை யாளாதபடி போக்கின. என்று உரை எழுதியுள்ளார். ്

தமிழ்மொழியின் முதற் பெருங்காப்பியம் என்றும் முத்தமிழ்க் காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என் றும், தனிப்பெரும் முதல் நூல் என்றும் பலவாறாகச் சிறப் பித்துப் பேசப்படும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/67&oldid=554052" இலிருந்து மீள்விக்கப்பட்டது