பக்கம்:காரும் தேரும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காரும் தேரும்

சேரன்தம்பி இசைத்த சிலப்பதிகாரத்தில்தான் முதன் முத லாக நேரடியாகப் பலவிடங்களிலும் தமிழ் நாடு’ என்ற சொல் பயின்று வரக் காணலாம். குன்றக் குறவர்கள் மூலமா கவும் தண்டமிழாசான் சாத்தன் மூலமாகவும் கண்ணகி வரலாற்றைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் பாங்குறச் சமைக்க வேண்டுமென முடிவெடுக்கிறான். அக் கல்லினை எங்கிருந்து எடுத்து வருவது? என்ற கேள்வி பிறக்கிறது. தன் அறிவுடை அமைச்சரை நோக்க அவர் எழுந்து, பொதிய மலையிலி லிருந்தும், இமய மலையிலிருந்தும் பத்தினிக் கடவுளுக் குரிய கல் கொண்டு வரலாம். பொதிய மலையிலிருந்து கல் கொண்டுவந்தால் காவிரியாற்றிலும், இமய மலையிலி ருந்து கல் கொண்டு வந்தால் கங்கைப், பேரியாற்றிலும் நீராட்டலாம் என்றார். இறுதியில் இமய மலையிலிருந்து கல் கொணர்ந்து கங்கையில் நீர்ப்படை செய்வது என்று முடிவு செய்யப்படுகிறது.

அதுபொழுது வில்லவன் கோதை என்னும் அமைச்சன் எழுந்து,

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது கருதினை யாயின் ஏற்பவர் முதுநீர் உலகின் முழுவதும் இல்லை

-சிலப்பதிகாரம்: காட்சிக் காதை :165-167 என்றும் பேசுகின்றான். உடனே அழும்பில் வேள் என்னும் செங்குட்டுவனின் தானைத் தலைவன் எழுந்து,

- . . . . o - . . * இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுதவோர் கற்கே யாதலின் வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் கன்னாட்டுச் செழுவில் கயல் புலி மண்ட்லையேற்ற வரைக . ു. -சிலப்பதிகாரம் : காட்சிக் காதை: 268-172,

--

= -- i. - *

எனப் புகன்றான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/68&oldid=554054" இலிருந்து மீள்விக்கப்பட்டது