பக்கம்:காரும் தேரும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் தமிழ்நாடு 67

இளங்கோவடிகள் தமிழ்நாடு’ என்ற சொல்லைத் தம்

காவியத்தில் , புகார்க்காண்டத்திலு ம் ஆண்டுள்ளார். கோவலன் மதுரையைக் குறிப்பிடுகின்றபொழுது

- o o to . " . . . . . . . - ".

தென்மிழ் நாடாளும் தீதுதிர் மதுரை

-சிலப்பதிகாரம்: நாடுகண் காதை:58

என்று குறிப்பிட்டுள்ளான்.

மதுரைக் காண்டத்தின் இறுதிக் கட்டுரையில்,

வடவாரியர் படை கடந்து தென்தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் என்றும், வஞ்சிக் காண்டத்தில் வரும் வாழ்த்துக் காதையின் உரைப்பாட்டு மடையில்,

தென்தமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து

  • 1. - . 1. என்றும் வருகின்ற பகுதி கொண்டு தமிழ்நாடு என்ற சொல்லை இளங்கோவடிகள் ஆண்டுள்ளமையை அறிய

ԹՆ) T ԼԸ) -

தமிழகம் என்ற சொல்லையும் தமிழ்நாடு’ என்ற பொருளில், o

இமிழ்கடல் வனைப்பின் தமிழகம் அறியத் தமிழ் முழு தறிந்த தன்மைய னாகி

-சிலப்பதிகாரம் : அரங்கேற்றுகாதை:87-88

o ്.. :

என்று அரங்கேற்று காதையில் அழகுற அமைத்துள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், இவ் விடங்களில் எல்லாம் தமிழ்நாடு என்றே பொருள் கூறிச் செல்வது சற்று ஆழ்ந்து நோக்குதற்குரியது. - " -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/69&oldid=554056" இலிருந்து மீள்விக்கப்பட்டது