பக்கம்:காரும் தேரும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இலக்கியம் உணர்த்தும் பண்பாடு

'கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி' என்று தமிழ்க்குடியின் பழமையினையும் வீரத்தினையும் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் ஐயனாரிதனார் பாராட்டிப் பேசியுள்ளார். நாம் வாழும் நிலப்பரப்பு உலகின் பழமையான பகுதி என்றும், மனித நாகரிகம் வளர்ந்த தொட்டில் என்றும் அறிஞர் கூறுவர். மண்ணும் மக்களும் போலவே மொழி யும் பழமைச் சிறப்புடையதாகும். மக்கள் தங்கள் உள்ளக் கருத்தினைப் பிறர்க்கு உணர்த்தும் கருவியே மொழியாகும்' என மொழிவர்.

மேற்புலத்து மொழி நூலறிஞர்கள், மக்கள் மனக் கருத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே மொழி என்று குறிப்பிட்டுள்ளனர். மொழி வளர வளர வளம்பெறு கிறது. மொழி வளம் பெற்ற நிலையில் முகிழ்ப்பவையே இலக்கியங்களாகும். எனவே மொழியின் வளத்தினையும் வாழ்வினையும் காட்டவல்லன. அம்மொழியில் எழுந்த இலக்கியங்களாகும்.

1. Language is a vehicle of thought.

2. The language is a mirror of their (people's) minds. —Pillsbury and Meader.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/7&oldid=553985" இலிருந்து மீள்விக்கப்பட்டது