பக்கம்:காரும் தேரும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் தமிழ்நாடு 69,

தண்தமிழ் நாட்டு மன்னன்: .

பாடிடு: ?51.

என்றும்,

சிறுத்தொண்டநாயனார் புராண த்தில், வண்தமிழ் நாட்டுச் செங்காட்டங்குடி,

-பாட்டு:35,

என்றும், தமிழ்நாடு’ என்ற சொல்லினை ஆண்டுள்ளார். சோழ நாட்டின் பேரமைச்சராக விளங்கிய அவர் தமிழ் நாட்டினை நாமணக்கச் சிறப்பித்துள்ளார். * * * * *

கல்வியிற் பெரிய கம்பர் தம் இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில் சீதா பிராட்டியைத் தேடித் தென் திசை செல்லும் வானரப்படைகளுக்கு வழிகூறும் சுக்கிரீவன் கூற்றாகத் 'தமிழ் நாடு' என்ற சொல்வினை எடுத்தாளு கின்றார். பிறக்கம் உற்ற மலைநாடு நாடி, அகன் தமிழ் நாட்டுப் பெயர்திர் மாதோ' என்று சுக்கிரீவன் கூறும் கூற்றில் 'தமிழ் நாடு’ என்ற சொல்லினைக் காண்க.

மேலும் சுக்கிரீவன் தமிழ் தந்த அகத்திய முனிவரின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் பொழுதும் தமிழ் நாடு: என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் என்று அகத்தியர் இருப்பிட்ம் குறிப்பிடப்படும்பொழுது தமிழ் நாடு' என்ற சொல் அமைந்திருப்பது நம்மைப் பெரிதும்

மகிழ்வூட்டுவதாகும்.

கோவை உலா அந்தாதிக்கோர் ஒட்டக் கூத்தன்' என்றும், கவிராசுஸன் கெளடப் புலவன் ஒட்டக் கூத்தன் என்றும், கவிச் சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தன்' என்றும் பலபடியாகப் பாராட்டப்,பெறும் ஒட்டக்கூத்தர் தாம்

&5ñr—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/71&oldid=554058" இலிருந்து மீள்விக்கப்பட்டது