பக்கம்:காரும் தேரும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காரும் தேரும்

கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்

-இராசராச சோழனுலா : 189. என்றும், தக்கயாகப் பரணியில்,

என்னுஞ்சமண் முகருநான் மறையோ ரேறுந்தமிழ் நாடனும்

-தக்க : கோயிலைப் பாடியது: 76

என்றும், தனிப்பாடலில் தென்னன் தமிழ் நாட்டைச் சிறியோ' என்றும் தமிழ்நாடு என்ற சொல்லைப் பெய்துள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டின் இணையிலாத பெரும் புலவரான குமரகுருபரர் தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில்.

தடம்பணை விரிந்த தமிழ்நாடு

-சப்பாணிப் பருவம் : 4

==

என்று பாடியுள்ளார். பரஞ்சோதி முனிவரின் திரு விளையாடற் புராணத்தில்,

பருங்கை மால்வரை பூழியன் பைந்தமிழ் நாட்டின்

-இரசவாதஞ் செய்த படலம் : 2

என்ற - தொடரில் 'தமிழ் நாடன்' என்ற சொல் வந்துள்ள

இருபதாம் நூற்றாண்டுப் புலவரான பாட்டுக்கொரு புலவராம் பாரதியார், -

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/72&oldid=554059" இலிருந்து மீள்விக்கப்பட்டது