பக்கம்:காரும் தேரும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அருளும் பொருளும்

அன்பு உலகை ஆளும் நீர்மையுடையது, அனைத் துயிர்க்கும் அன்பு செலுத்துதல் வேண்டும் என்பதே, வாழ் வின் தலையாய அறமாகும். அன்பின் வழியது உயிர் நிலை" என்றார் வள்ளுவர். அன்பற்றார் மனிதர் போன்று தோற்றம் தரினும், அவரை என்புதோல் போர்த்த நடைப் பிணமாகவே கருதவேண்டும் என்பது அவர் மனக்கோள் ஆகும். 'அன்பிற்குத் தாழ் இல்லை. அன்புடையார் தம் உடம்பினையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழும் பெற்றி உடையவராவர். அன்பு ஆர்வத்தினையும் அதன் பின்னர் நட்பினையும் பயக்கவல்லதாகும். அறம், மறம் ஆகிய இரண்டு மாறான உயிர்ப் பண்புகளுக்கும் அன்பே துணை செய்கின்றது. அன்பினை அகத்தில் கொண்டு புறத்தில் புலப் படுத்தாத வாழ்வு, வற்றிய பாலை நிலத்தின்கண் பட்டமரம் தளிர்த்தாற் போன்ற தன்மையுடையதாகும். இவ்வாறு பலவாறாக அன்பின் சிறப்பினைத் திருவள்ளுவர் வலியுறுத் திக் கூறுவர். வாழும் முறையினைக் கூறவந்த பாரதியா ரும் உயிர்களிடத்தில் அன்பு வேண்டுமென்றும், தெய்வம் உண்டு என்று தெளிதல் வேண்டுமென்று உறுதியான உள்ளம் வேண்டுமென்றும், இவையே வாழும் முறைமை யாகும் என்றும் கூறுகின்றபொழுது அன்பினையே முதலாவ தாக வற்புறுத்தியுள்ளார்.

உயிர்களிடத்தில் அன்பு வேணும்-தெய்வம்

உண்மை யென்று தானறிதல் வேணும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/74&oldid=554062" இலிருந்து மீள்விக்கப்பட்டது