பக்கம்:காரும் தேரும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காரும் தேரும்

கொள்ளும் தூய அன்பே-பரிவுகலந்த இரக்கமே அருள் என வழங்கும். எனவே அன்பின் முதிர்ந்த நிலையில் முகிழ்ப்பது அருள் எனக் கொள்ளலாம். அன்பில் தாயன்பு சிறந்தது என்பதால்தான், அருள் வடிவான ஆண்டவனைப் பெரியோர் 'தாயிற் இறந்த தயாபரன்" என்றும், 'தாயினும் சாலப் பரியவன்' என்றும் பாராட்டிப் பேசி யுள்ளனர்.

இனி அன்பின் எல்லையில் தோன்றும் அருளினை நாம் ஒருவாறு காண்போம். H.

சங்க காலத் தமிழ் மக்கள் ஆறறிவிற்குக் குறைந்த அஃறிணை உயிர்களையும் தங்களைப் போல எண்ணி அன்பு காட்டி அருள் செய்தனர். இயற்கையோடு கை கோத்து வாழ்ந்த வாழ்வே பழந்தமிழரின் வாழ்வாகும். இயற்கையின் பின்னணியில் எழுந்தனவே சங்கப் பாடல்கள் எனலாம். தொல்காப்பியனார் கூறும் முதல் கருப் பொருள்கள் இயற்கையின் வடிவமே அன்றோ? பேசாதன வற்றைப் பேசுவன போலவும், கேளாதனவற்றைக் கேட்குந போலவும் எண்ணிப் பழந்தமிழ்ப் புலவர்கள் கவிதை படைத்துள்ளனர். தொல்காப்பியனார் கூறும் இந்நெறிபுலவர்கள் கவிதை படைத்த இச்செந்நெறி-அன்பினையும் அதன் முதிர்ந்த நிலையாகிய அருட் பண்பினையும் நன்கு விளக்குவனவாம். ---

அன்னம், நாரை முதலிய பொருள்களைத்' ஆTது விடுவதாகக் கூறும் மரபு தமிழ் மரபாகும். நாள்தோறும் வந்து தன்னைச் சந்தித்து இன்னுரையாடி விட்டுச் செல்லும் தலைவன் பின்னொருகால் வாராது நின்ற விடத்து, அவன் தன்னைச் சந்தித்துச் சென்ற வேங்கை மரத்தடியை யெண்ணித் துயருறுகிறாள் தலைவி. கொடிய இரவிலே தங்கள் சந்திப்பின்போது துணையாக நின்ற அந்த வேங்கை மரத்திற்குத் தலைவன், பறவைகள் வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/76&oldid=554064" இலிருந்து மீள்விக்கப்பட்டது