பக்கம்:காரும் தேரும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் 75

கூடத் துதுசொல்லி யனுப்பவில்லையே என்று தலைவி

புலம்புகிறாள். தன் துயரினும் வேங்கை புலம்புமே என்று எண்ணித் துயருறும் தலைவியின் அரிய அருட் பண்பு இது: - 7--" "

நமக்கொன்று உரையார் ஆயினும் தமக்கொன்று இன்னா இரவின் இன்துணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ துறத்தல் வல்லியோர் புள்வாய்த் துதே. --- .

--குறுந்தொகை: 22 6

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன். தன் வினை முடித்து விரைந்து வீடு நோக்கி வருகிறான். அவன் ஏறிச் செல்லும் தேர் மணி ஒசையெழுப்பி விரைந்து செல்கிறது. தேரின் மணியோசை, இணையாக இருந்து மகரந்தப் பொடிகளை மலரினின்று உறிஞ்சி உண்டு கொண்டிருக்கும் பறவைகளை ஒட்டிவிடுமே என்று அச்சங்கொண்ட தலைவன் தேரினை நிறுத்திக் கீழே இறங்கித் தேர் மணி களின் நாக்கினைக் கட்டிவிட்டு ஒலியெழும்பாத நிலையில்பறவைகள் அமைதி குலையாத நிலையில்-தேரோட்டிச் சென்றான் என்பது அகநானூறு நமக்குத் தெரிவிக்கும் நற்செய்தியாகும்.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

மணிகா ஆர்த்த மாண்வினைத் தேரன்.

r-, -அகநானுாறு : 4 : 1 0-12

நெஞ்சம் சோர்ந்த நிலையில் மாதவி கானல்வரிப் பாட்டினைப் பாடுகின்றாள். தேரில் வந்த தலைவன் தனக்குத் தலையளி செய்ய மறந்தாலும், தான் அவனை மறத்தல் இயலாது என்பதனை அரும்புகளுக்கும் அன்னப் பறவைகளுக்கும் தெரியப்படுத்துகின்றாள் மாதவி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/77&oldid=554065" இலிருந்து மீள்விக்கப்பட்டது