பக்கம்:காரும் தேரும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s

76 காரும் தேரும்

  • - தம்முடைய தண்ணளியும் தாமுங்தம் மான்றேரும்

எம்மை கினையாது விட்டாரோ விட்டகல்க

அம்மென்இணர அடும்புகாள் அன்னங்காள்

கம்மை மறந்தாரை காமறக்க மாட்டேமால்.

-சிலப்பதிகாரம் : கானல்வரி : 32

இத்தகு அருள் நெறியினையே சீகாழிப்பகுதியில் பிறந்த 'சிவம் பெருக்கும் திருஞான சம்பந்தரும் கையாளு கின்றார். கிளிக்கு அருளோடு தேனோடு பாலினைத் தந்து, அதற்குக் கைம்மாறாகத் தோணியப்பராம் பிறையாளனின் திருப்பெயரினை- சிவசிவ' என்ற உயிர் மொழியினை ஒருகால் ஒலிக்க வேண்டும் என்று குறையிரந்து நிற்கின்றார்.

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.

-முதல் திருமுறை : திருத்தோணிபுரம் : 1.0

திருஞான சம்பந்தப்பெருமான் கிளியினை இறைவன் பால் தூது விட்டார். வைணவ பக்தரும் பன்னிரு ஆழ்வார் களில் ஒருவரும் தலையாயவரும் ஆகிய நம்மாழ்வார் அவர்கள் நாயகன்-நாயகி பாவத்தில் அமைந்துள்ள தம் பாடலில் எளிய உயிர்க்கும் இரங்கியருளும் அருட் பண்பினைத் தெளிவுற விளக்கியுள்ளார். திருமால்பால் ஆராத அன்பு கொண்ட அடியாள் ஒருத்தி, தான் வளர்க் கும் சிறு பூவையினை அழைத்துத் திருமாலிடம் தூது சென்று தன் காதல் நோயினை உரைத்து வரும்படி வேண்டிக் கொண்டாள். ஆனால் சிறு பூவையோ அவள் குறை முடிக்காமல் வாளாயிருந்துவிட்டது. அதன் பயனாகக் காதல் நோய்வாய்ப்பட்ட காரிகை வண்ணம் மாறி வடிவு திருந்தி நொந்திளைத்தாள்: படுத்த படுக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/78&oldid=554066" இலிருந்து மீள்விக்கப்பட்டது