பக்கம்:காரும் தேரும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் 77 யானாள்; சிறு பூவைக்குத் தானியக் கதிர்மணிகளை இட்டுப்பேனவும் ஆற்றாத நிலைக்குட்பட்டாள். எனவே வேறிடம் நாடிச் சென்று சிறு பூவை பிழைத்துக் கொள்வதாக என்று அதனிடம் எடுத்துரைத்தாள்:

யேலையே சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்து தாய் கோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே

to -திருவாய்மொழி : 1 : 4-8

இப்பாடலில் தலைவி திருமால்பால் கொண்ட பக்தி யுடன் சிறு பூவையினிடத்துக் கொண்ட அன்பும் அருளும் புலனாகின்றன.

அருள் உணர்வு காரணமாகத்தான் காட்டிலே குளிரால் நடுங்கிய கோலமயிலுக்குத் தன் போர்வையை நல்கினான் பேகன்; பூத்தலை யறாஅப் புனைகொடி

முல்லை நாந்தழும்பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்ளெனக் கொடுத்தான் பரந்தோங்கு பண்பிற் பாரிப்பெருமகன்'. நீண்டநாள், வாழவைக்கும் பெறற்கரிய நெல்லிக்கனியைப் பெற்றுத் தான் உண்ணாமல் ஒளவையார்க்கு அருளால் ஈந்தான் அதிகமான். 'நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது தந்தான் நள்ளி. கூத்தர்க்காகத் தன் குறும்பொறை நாட்டையே கொடுத் தளித்தான் ஒரி. எளிய புறாவின் உயிர்க்காக இரங்கித் துலாக்கோல் ஏறித் தன்னையே தந்தான் சிபி. இவ்வாறு அருள் உள்ளங்கொண்டு அருளாட்சிக்கு உதவிய பலரை நாம் இலக்கியத்தில் காணக்கூடும்.

அருளின் சிறப்பினை நன்குணர்ந்த திருவள்ளுவர் அருளுடைமை' என்ற அதிகாரத்தில் பொருள்களாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/79&oldid=554067" இலிருந்து மீள்விக்கப்பட்டது