பக்கம்:காரும் தேரும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காரும் துேரும்

தங்குதடையற்ற-ஆற்றல் சான்ற உணர்ச்சிகள் அமைதி

யில் நினைவுகூரப்பட்டதே கவிதையாகும்' என்பர் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த். இன்பமான நேரங்களில் எழும் இனிமையான எண்ணங்களின் பரதிபலிப்பே கவிதை'

என்று கூறுவர் கவிஞர் ஷெல்லி. சிறந்த எண்ணங்களின் பதிவு ஏடே இலக்கியம் என்பர் எமர்சன் என்னும் அறிஞர்". கவிஞன் பற்றுகின்ற பொருள்கள் அழகுப் பொருள் களாகவே இருந்து எஞ்ஞான்றும் மகிழ்ச்சி நல்குவன: என்பது கவிஞர் டேட்ஸ் அவர்கள் கூறும் கருத்தாகும். மனித சமுதாயம் விந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து சிக்கல் அவிழாமல் டெக்கும் எண்ணங்களின் குணபாவங் களைக் கவிஞன் இலக்கியத்தின் வாயிலாகக் குழைத்துத் தருகிறான். இதனால் கவிதை இலக்கியம் வாழ்க்கையின் உரைகல்லாகின்றது . இது குறித்தே அனுபவத்தினை மொழியில் பெயர்த்துத் தருவதே கவிதை" என்ற கருத்தும் எழுந்தது.

SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS -

. Poetry is the spontaneous overflow of powerful feelings recollected in tranquility. —Wordsworth.

2. Poetry is the expression of the best and the happiest moments of the happiest and best minds.

–P.B. Shelley

3. Literature is the record of best thoughts

—Emerson.

4. A thing of beauty is a joy for ever

—Кeats.

5. Poetry is at the bottom, the criticism of life.

–Matthew Arnold.

6. Poetry is the translation of experience into էոցաaցe. –L. Abercrolauble.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/8&oldid=553986" இலிருந்து மீள்விக்கப்பட்டது