பக்கம்:காரும் தேரும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காரும் தேரும்

செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் இருக்க, உயர்ந்த வர்களிடத்தில் மட்டுமே அருட்செல்வம் இருக்குமென்றும், அவ் அருட்செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகு மென்றும் கூறியுள்ளார்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.

-திருக்குறள் : 24 1

மேலும் அவர், வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது அருளே என்றும், அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர் களுக்கு அறியாமையாகிய இருள் பொதிந்த துன்ப உலகில் வருந்திவாழும் வாழ்க்கை இல்லை என்றும் உயிரின் பொருட்டு அஞ்சி வாழும் தீவினை அருளுடையோனுக்கு இல்லை என்றும், அருளை மறந்தவர் அறவழி செல்லாத குறிக்கோளற்ற வாழ்வினைக் கொண்டவர் ஆவர் என்றும் அருளின் சிறப்பினை விளக்கியுள்ளார். இவ்வாறு விளக்கி வருங்கால் பொருள் பற்றிய குறிப்பினையும் அருளோடு இணைத்துச் சேர்த்து ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார். அக் குறட்பா வருமாறு:

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

-திருக்குறள்: 24 7

இக்குறட்பாவின் பொருள் பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, இவ்வுலக உயிர்களிடத்து அன்பு இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்' என்பதாகும்.

எனவே பொருளுக்கும் அருளுக்கும் உள்ள தொடர் பினை ஒருவாறு காண்போம். இவ்வுலக வாழ்விற்கு இன்றியமையாதது பொருளாகும் . பொருள் என்ற சொல்லே பொருள் பொதிந்த ஒன்றாகும். ஒரு பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/80&oldid=554069" இலிருந்து மீள்விக்கப்பட்டது