பக்கம்:காரும் தேரும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் 79

ளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய் வது பொருளன்றி வேறு இல்லை என்பர் திருவள்ளுவர்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்

-திருக்குறள்: 751

மேலும் அவர் பொருள் என்று சொல்லப்படும் நந்தா விளக்கு, தன்னைச் சேர்த்து வைத்துள்ளவர் நினைத்த இடத்திற்குச் சென்று, நின்ற இடையூற்றினைக் கெடுக்கும் என்றும், பொருளற்றோர் எள்ளலையும், பொருளுடையார் சிறப்பினையும் பெறுவர் என்றும் பொருளின் பெருமையைக் குறித்துள்ளார். பொருள் அற்றவரைப் பொருளாகச் செய்வது பொருள்' என்று குறிப்பிட்ட வள்ளுவர் அந்தப் பொருளை ஒருவன் தவறாது ஈட்டவேண்டும் என்றும், ஏனெனில் அவனுடைய பகைவரின் செருக்கை அழிக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எ.கதனிற் கூரியது இல்,

  • -திருக்குறள் :759

பொருளை ஈட்டியவர் அறத்தினையும் இன்பத்தினையும் ஒருசேரப் பெறுவர் என்று பொருளின் சிறப்புக் கூறும் திருவள்ளுவர். அருளொடும் அன்பொடும் பொருந்தாத வழிகளில் வந்த பொருளின் ஆக்கத்தைப் பெற்று மகிழா மல் அதைத் தீமையானது என்று நீக்கி விடவேண்டும்

என்றும் வற்புறுத்துகின்றார்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.

-திருக்குறள்: 755

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/81&oldid=554070" இலிருந்து மீள்விக்கப்பட்டது