பக்கம்:காரும் தேரும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காரும் தேரும்

இதனால் பொருள் மிகவும் வேண்டப் படுவதாக இருந்தாலும் கூட, அப்பொருள் அருள் வழியில் வருவ தாக இருக்கவேண்டும் என்பது புலனாகின்றது.

or

பழந்தமிழர் தமிழர் கொண்ட அறுவகைப் பிரிவுகளில் ஒன்று பொருள்வயிற் பிரிவாகும் :

பொருள் வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.

-தொல்காப்பியம் : அகத்திணை இயல் : 33:

இவ்வாறு பொருள்வயிற் பிரிவு என்ற பிரிவு அமைந் திருப்பதே பொருளின் சிறப்பினைப் புலப்படுத்துவதாகும். திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற பழமொழி யும் இது குறித்தே எழுந்தது. விழைவது உம் விட்டோம் என்பார்க்கும் கூடப் பொருள் ஒரளவு தேவைப்படுகின்றது. மேலும் அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் த ா ய ர ல் வளர்க்கப்படுவதேயாகும் என்று திருவள்ளுவர் கூறுவர்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.

-திருக்குறள் : 7 57

இவ்வாறான கருத்துகள் பொருள், அருள் ஆகிய இரண்டினையும் ஒருசேர உயர்வு படுத்துவதாயிருப்பினும், ஒன்றோடு ஒன்று உயர்வு காண ஒப்பிட்டுக்காணும் பொழுது, பொருளினும் அருளே சான்றோர்களால் பெரிதும் பாராட்டப் பட்டுள்ளது என்பது புலனாகும். பொருள், வாழ்விற்கு இன்றியமையாது தேவைப்படுவதுதான்; ஆனால் பொருளே வாழ்வாகி விடாது. மேலும் பொருள் மிகுந்த வழி பல தவறான வழிகளுக்கு இழுத்துச் செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/82&oldid=554072" இலிருந்து மீள்விக்கப்பட்டது