பக்கம்:காரும் தேரும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் . 81

லும் தன்மையுடையது. பணம் பத்தும் செய்யும் என்பர். நல்லவை நாடுவதோடன்றி அல்லவைக்குத் தூண்டும் பெற்றியுமுடையது பொருள். மேலும் ஒருவனை, ஈட்டிய பொருளே இறுதியில் அழிப்பதைக் காணலாம்; வாழ்விற்கு உதவும் பொருளே வாழ்வை முடிக்கப் பயன்படலாம். எனவே பொருள் நமக்குக் கருவியாகலாமே யொழியப் பொருளிற்கு நாம் கருவியாகிவிடக் கூடாது. நமக்கு முன் நல்வழியில் வாழ்ந்து சென்ற சான்றோர் வாழ்க்கை முறைகள் நமக்கு நல்வழி காட்டவல்லன.

திருநாவுக்கரசு நாயனார் திருப்புகலூர்த் திருக்கோயி லில் உழவாரத்தொண்டு செய்கிறார். இறைவன் அவரைச் சோதிக்க எண்ணம் கொண்டார். திருநாவுக்கரசர் புல் செதுக்கும் பொழுதும், காலிற் குத்தும் புல்லையெடுத்து அப்புறம் எறியும் பொழுதும், அப்புல்லோடும் கல்லோடும் பொன்னையும் மணியையும் கலந்து வைத்தார். ஆயினும் ஆண்டவன் அருளையே நினைத்துருகும் அப்பர் பெரு மானுக்குப் பொருளின் மதிப்பு ஒரு சிறிதும் தெரியவில்லை. கேடும் ஆக்கமும் கெட்ட திருவின ராகிய அவர், ஒடும் செம்பொனும் ஒக்க நோக்கும் உளம் பெற்றவர். எனவே செம்பொன்னினையும் நவமணியினையும் உருள் பருக்கை யுடன் ஒக்க நோக்கி, அவற்றைத் தம் உழவராத்தினில் ஏந்திப் பூங்கமல வாவியினிற் புக எறிந்தார்." -

அடுத்து, இளையான் குடிமாற நாயனார் தாம் ஈட்டிய பொருளை ஒரு பொருட்டாக மதியாது வரும் அடியவர்க்கு ஆசனத்திடை வைத்தருச்சனை செய்தபின்’ உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத்திறனில் அமுது செய் வித்தார். வளஞ் சுருங்கிய நிலையிலும் மனஞ் சுருங்கு தலின்றி, அடியார்களிடம் கொண்ட அருளுணர்வால் திருவமுது படைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்தார். ஈசன் அருளுடையவரையே-ஆகம நூல் பயின்றவரையே மெய்ப்பொருள் என்று எண்ணி வாழ்ந்தார் கைப்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/83&oldid=554073" இலிருந்து மீள்விக்கப்பட்டது