பக்கம்:காரும் தேரும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காரும் தேரும்

மிகுந்ததிருக்கோவலூர் மன்னர் ம்ெப்பொருள் நாயனார். காடவர் கோமான் கச்சியம் பதியில் பெருங்கோயில் ஒன்று கட்டினான், பொருளால்; திருநின்றவூரில் பொருளில்லாக் காரணத்தால், அருளால் எண்ணி, தம்மனத்தில் கோயில் ஒன்று கட்டினார் பூசலார் நாயனார். ஆ ண் ட வ ன் பொருளால் கட்டப் பெற்ற கோயிலுக்குச் செல்லாமல் அருளால் கட்டப் பெற்ற கோயிலுக்கே தாம் முதற்கண் எழுந்தருளுவதாகப் பல்லவ மன்னனின் கனவிற் கூறி மறைந்தார். இதனைப் பெரிய புராணத்தில்,

கின்றவூர்ப்பூச லன்பன் நெடிதுங்ாள் கினைந்து செய்த நன்று நீ டாலயத்து நாளைகாம் புகுவோம் நீ இங்கு ஒன்றிச் செயலை நாளை யொழிந்து பின் கொள்வாய் என்று கொன்றையார் சடையர் தொண்டர் கோயில்கொண்

டருளப் போந்தார்

- பெரிய புராணம் : பூசலார் நாயனார் : 1.0

என வரும் பாடல் கொண்டு அறியலாம். o

சங்க காலத்திலும் பொருள் வாழ்விற்குத் தேவையென் றாலும் கூடப் பொருளினும் அருளே போற்றப்பட்டது. தலைவன் ஈட்டிவரும் பொருளைவிட, அவன் நெஞ்சில் சுரக்கும் அருளையே தலைவி பெரிதும் விரும்பின்ாள்.

பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே.

-அகநானூறு 53 : 15, 16

. ... ". அருளை அகத்திலிருந்து அகற்றிய நிலையில் தலைவி யைத் தான் தனித்துவிடுத்து நீங்கினால், தணியாத துயர் உறுவாளே என்று கருதித் தலைவன் பல்வகைப் பொருள் நலமும் பொருந்திய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாக இருந்தாலும் அது வேண்டுவதன்று என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/84&oldid=554074" இலிருந்து மீள்விக்கப்பட்டது