பக்கம்:காரும் தேரும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் 83 கூறிச் செலவழுங்கினதாகக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தம் பட்டினப்பாலையில் பாடியுள்ளார்:

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே. -

-பட்டினப்பாலை : 21 8–220

தலைவன் தலைவியின்பாற் கொண்ட தணியாத காதலும், தலைவி தன் பிரிவால் துயருறுவாளே என்னும் அருளுணர்வும் இவ்வடிகளில் விளங்கக் காணலாம்.

அருளுருவாய் ஆண்டவனைக் கண்ட நாடு இந்த நாடு. எவ்வுயிர்க்கும் இரங்கியருள் சுரக்கும் மனமே எம்பெருமான் நடம் புரியும் இடம் என்றார் வடலூர் வள்ளலார். முன்னியது முடிக்கும் முருகப்பெருமானை வணங்கி வழி படும் அடியார்கள் பொருளையும் பொன்னையும் போகத் தினையும் வேண்டாமல் அருளையும் அன்பையும் அறத்தையுமே அவன்பால் அகங்குழைந்து வேண்டிப் பரவு கின்றார்கள் என்பதனைப் பரிபாடல் கூறும்:

■ ■ ■ ■ ■ 軒 யாம் இரப்பவை , பொருளும் பொன்னும் போகமும் அல்ல கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே.

-பரிபாடல் : 5 : 78-81

இதுகாறும் கூறியவற்றால் அன்பே உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையானது என்பதும், அவ்வன் பின் முதிர்ந்த நிலையே அருள் என்பதும், பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லையென்பதும், அதுபோன்றே அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லையென்பதும், பொருளற்றவரைப் பொருளாகச் செய்வது பொருள் என்பதும், ஆயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/85&oldid=554075" இலிருந்து மீள்விக்கப்பட்டது