பக்கம்:காரும் தேரும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தொண்டை நாட்டின் பெருமை

பழந்தமிழ் நாட்டின் சிறப்பிற்குரிய அரசமரபினர் மூவர் ஆவர்; அவரே சேர சோழ பாண்டியர் என வரலாற்றிலும் இலக்கியங்களிலும் சிறப்புறக் குறிக்கப் பெறுவர். தொல்காப்பியனார் புறத்திணை இயலில்,

போங்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் தானையர் மலைந்த பூவும்

-தொல்காப்பியம் : புறத்திணை இயல் : 5

என்று சேர பாண்டிய சோழர் குடிக்கு உரிய அடையாளப் பூமாலை பனந்தோடு, வேம்பு, அத்தி என்று குறிப்பிட்டுள் ளார். மேலும் தமிழ்மறையாம் திருக்குறளுக்குச் சிறந்த முறையில் செறிந்த உரையினை ஆக்கியளித்த பரிமேலழகர்,

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று

-திருக்குறள் : 955

என்ற குறளுக்கு உரை எழுதும்பொழுது 'பழங்குடி

தொன்றுதொட்டு வருதல் என்று குறிப்பிட்டு-அது சேர

சோழ பாண்டியர்' என்றாற் போலப் படைப்புக் காலந்

தொடங்கி மேம்பட்டு வருதல்' என்று குறிப்பிட்டுள்ளமை,

யும் ஈண்டு நன்கு நினைக்கத்தக்கது.

இத்தகு சிறந்த மூவேந்தர் குடியே யன்றியும்

எண்ணற்ற குறுநில மன்னர் குடிகள் தமிழகத்தில்

4%nr—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/87&oldid=554077" இலிருந்து மீள்விக்கப்பட்டது