பக்கம்:காரும் தேரும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காரும் தேரும்

வாழ்ந்து அரசோச்சி நலம் பல பயந்துள்ளன. அத்தகு குடிகளில் சிறப்பிடம் பெறத்தக்கதொரு குடி தொண்டையர் குடியாகும். இத்தொண்டையர் குடிக்குத் தோற்றுவாய் செய்பவனாக இலக்கியத்தின் வழி அறியப்படுபவன்' தொண்டைமான் இளந்திரையன் ஆவன் . இவன் முடியுடை | மன்னர் மூவரோடு சார்த்தி எண்ணப்படும் பெருமைக் குரியவன் என்றாலும்,

வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய

-தொல்காப்பியம்; மரபியல் : 84

W

என்னும் நூற்பாவிற்கு, மன்பெறு மரபினேனோரெனப் படுவார், அரசு பெறு மரபிற் குறுநில மன்னரெனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும்’ எனப் பேராசிரியர் உரை எழுதியிருத்தலால் இவனைக் குறுநில மன்னனென்றே நம் முன்னோர் கருதினர் எனத் தெரிகின்றது. மேலும்,

முக்கீர் வண்ணன் பிறங்கடை யங்ர்ேத்

திரைதரு மரபின் உரவோன் உம்பல்

-பெரும்பானாற்றுப்படை : 30-31

என்ற பெரும்பாணாற்றுப்படையின் அடிகளுக்கு உரை யாசிரியர் நச்சினார்க்கினியர், கடல்போலு நிறத்தை யுடையவன் பின்னிடத்தோனாகிய சோழன் குடியிற் பிறந்தோன். அக்கடலின் திரை கொண்டு வந்து ஏற விட்ட மரபாற் திரையனென்னும் பெயரையுடையவன்' என்று உரை கூறி. மே ற் .ெ கா ண் டு வரலாற்று விளக்கமும் பின்வருமாறு தந்துள்ளார்; ' என்றதனால் நாகப்பட்டினத்துச்சோழன் பிலத்துவாரத்தால் நாகலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/88&oldid=554078" இலிருந்து மீள்விக்கப்பட்டது