பக்கம்:காரும் தேரும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டின் பெருமை - 87

கத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வேனென்ற பொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட அவன் வந்து கரையேறின், அவற்குயான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று அவன்கூற. அவளும் புதல்வனை அங்ங்னம் வரவிடத் திரைதருதலின் திரையனென்று பெயர் பெற்ற கதை கூறினர்' என்றுகுறிப் பிட்டுள்ளார். இதற்குச் சான்றாகப் பெரும்பாணாற்றுப் படையின் இறுதியில் காணப்பெறும் பழைய வெண்பாவில் பெரிய கடல் இரவு பகல் என ஒன்றின்றி எப்பொழுதும் உறங்காது ஒலியெழுப்பிக் கொண்டேயிருப்பது இளந்திரை யனை நாங்கள் பெற்றெடுத்தோம் என்ற செருக்கினாலே யாகும் என்ற கருத்து அடங்கிக்கிடக்கின்றது. அவ்வழகிய பாடல் வருமாறு:

கங்கலு நண்பகலுங் துஞ்சா வியல்பிற்றாய் மங்குல்சூழ் மாக்கட லார்ப்பது உம்-வெஞ்சினவேற் கான்பயந்த கண்ணிக் கடுமான் றிரையனை யான்பயந்தே னென்னுஞ் செருக்கு.

-பெரும்பாணாற்றுப்படை : இறுதிவெண்பா. ==

மணிமேகலை என்னும் பெளத்த சமயக் காப்பியத் திலும் இதனை யொத்த கருத்துக் காணப்படுகின்றது.

நாக நாடு நடுக்கின் றாள்பவன்

வாகை வேலோன் வளைவணன் றேவி வாச மயிலை வயிற்றுட் டோன்றிய

பீலிவளை யென்போள் பிறந்த வங்காள்

இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்

கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்

-மணி: ஆபுத்திரனாடடைந்த காதை : 54-59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/89&oldid=554079" இலிருந்து மீள்விக்கப்பட்டது