பக்கம்:காரும் தேரும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 7

சுருங்கச் சொன்னால், மொழியின் வாயிலாக வாழ்க் கையை வடித்தெடுத்துக் காட்டி உணர்த்துவதே இலக் கியம்' என்ற அட்சன் கருத்துப் பொருந்துவதாகும். சிறந்த இலக்கியப் படைப்பாளராம் கவிஞர்கள் காலத் தின் கருவாகவும் விளங்கிக் கருத்தாவாகவும் திகழ் கிருர்கள். உள்ளதை உள்ளவாறு கூறுவதோடு அமை யாது, தங்கள் உள்ளம் உணர்ந்தவாறும் கூறுகின்றார்கள். எதிர்காலத்தைப் படைக்கும் ஆற்றலில் அவர்கள் வல்லவர் களாக விளங்குகிறார்கள். எனவே கவிஞர்களை மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள்’ என்று குறிப்பிட்டார் ஷெல்லி.2

கவிஞன் கற்பனையுலகில் பறக்கிருன்; மனித நிலை யினும் மேம்பட்ட நிலையில் நின்று பார்க்கிருன். அவன் காட்டும் கற்பனையுலகில் நம் நுண்ணுடல் நுழைகிறது. அங்கே இன்ப துன்ப உணர்ச்சிகளை நாம் பெறுகிறோம். ஆயினும் கற்பனைஉலகத் துன்பம் நமக்கு எவ்வித இடையூற்றினையும் பயப்பதில்லை; மாறாகக் கற்பனை யுலகிலே நாம் உறுகின்ற துன்பம் நமக்கு இறவாத இன்பத்தையே பயந்து நிற்கிறது. இலக்கியப் பூங்காவில் நுழைந்து, தாதுண்டு திளைத்துவிட்டுத் திரும்பிய பின்னருங்கூட, அவ் இலக்கிய உலக அனுபவங்கள் நம் மனக்கண் முன் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. கவிஞன் கூறும் பேர்க்கில் எளிய பொருள்களாக நமக்கு இதுவரை தோன்றினவெல்லாம் அழகுப் பொருள்களாகஅரிய பொருள்களாக-நமக்குத் தோற்றம் தரத் தொடங்கி விடுகின்றன. இலக்கியத்தின் உட்கிடக்கையாக ஒரு பொருள்

1. Literature is thus fundamentally an expression o life through the medium of language.

—w. H. Hudson.

2. ' Poets are the unacknowledged legislators of the world. —P.B. Shelley

  • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/9&oldid=553987" இலிருந்து மீள்விக்கப்பட்டது