பக்கம்:காரும் தேரும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88: காரும் தேரும்

இளந்திரையன் என்ற பெயர்க்காரணம் இவ்வாாறி ருக்க, மகாவித்துவான் பாஷாகவிசேகரர் ரா. இராக வையங்கார் தம் பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி உரையில் இக் கொள்கைகளை மறுத்துத் துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அரமகட்கும் தோன்றியவன் பல்லவன் என்றும், போத்து என்பது பல்லவர்க்குரிய இடபக்கொடியையே குறிக்கும் என்றும், தொண்டை என்பது குடிப்பெயர் என்றும், பல்லவப் பெயர்க்கு முன்பே தொண்டையன் என்ற பெயர் உண்டாகி யிருக்கவேண்டும் என்றும், துரோணம் என்ற பதமே தொண்டைஎன மறுவிற்றென்றும், பல்லவகுலம் கடல்கெழு செல்வி வழியாக வந்த துரோணன் மரபென்றும் அரிய ஆராய்ச்சி விருந்து அளித்துள்ளார்.

இத் திரையன் பரம்பரை பழமைமிக்க தென்று பழைய இலக்கியங்களால் அறியக்கிடக்கின்றது. அகநானுாற்றில்.

வினைகவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்டு ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்

C -அகநானூறு : 23 1 : 1-3

என வருவது காண்க.

ஞாயிற் றொளியான் மதிகிழற்றே தொண்டையர் கோவிற் றிருந்த குடை

என்று யாப்பருங்கில விருத்தி மேற்கோளும் கூறா நிற்கும். இவன் இளந்திரையன் எனவும், திரையன் எனவும், திரையல் எனவும் நூல்களில் வழங்கப்படுகின்ருன். திரு முல்லை வாயில் புராணம் இவனைப் பேரரசனாக்கி ஆதொண்டைச் சக்கரவர்த்தி எனப்பெயர் சூட்டி, அதற்கு வேறு வரலாறும் கூறுகின்றது. இவன் இளந்திரையம் என்றோர் நூல் இயற்றினான் என்று இறையனார் அகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/90&oldid=554080" இலிருந்து மீள்விக்கப்பட்டது