பக்கம்:காரும் தேரும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டின் பெருமை -89

  • *

பொருளுரை, நன்னூல் மயிலை நாதருரை முதலியன தெரிவிக்கின்றன. மேலும் இவன் நற்றிணையில் மூன்று பாடல்களும் (94, 99, 106) புறநானுாற்றில் ஒரு பாடலும் 85) பாடியுள்ளமையால் இவன் கவித்திறம் வ ல் ல காவலன் என்பதறியலாம். நன்னூல் மயிலைநாதருரையில் (ப; 245) திரையனுார் என்பதற்குத் திரையனாற் செய்யப் பட்ட ஊர், திரையனது ஊர் எனப் பொருள் விடுக்கப் பெறுதலால், இப்பெயருள்ள ஊரொன்று அந்நாளில், இவனால் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனா கும். 'இன்னும் தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது .ெ சங் க ற் ப ட் டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது' என ஊரும் ப்ேரும் என்ற நூலில் பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இனித் தொண்டை நாட்டின் பெருமையினை நோக்கு வோம். -

"சேர நாடு யானைக்குப் பெயர்போனது; சோழ வளநாடு சோற்றுக்குச் சிறப்புடையது; பாண்டி நாடு முத்துக்குப் பெருமை சான்றது; ஆயின் தெளிந்த நீர் வளம் சான்ற வயல்களையுடைய தொண்டை நாடோ வெனில் நன்கு கற்று வல்ல சான்றோர்கள் நி ைற ந் த பெருமைக்குரியது -இவ்வாறு அறிவிற்சிறந்த ஒளவை யார் பாராட்டியுள்ளார். அந்தச் சிறந்த பாடல் வருமாறு:

வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளங்ாடு சோறுடைத்து பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணிர்வயற் றொண்டை கன்னாடு சான்றோ ருடைத்து. * மேலும் ஈண்டு மற்றொன்றும் கூர்ந்து நோக்கத்தக்கது. மூவேந்தர் நாட்டோடு பெருமைக்குரியதாக நான்காவதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/91&oldid=554081" இலிருந்து மீள்விக்கப்பட்டது