பக்கம்:காரும் தேரும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காரும் தேரும்

இலங்கிய நாடு தொண்டை நாடு என்பதும் இதற்ை போதம் ரும். இத்தொண்டைமண்டலம் தமிழ் நாட்டின் வடபகுதி) யாகும். இந்நாட்டின் பழைய எல்லை: மேற்கே பவள மலை; வடக்கே வேங்கடமலை: கிழக்கே கடல்; தெற்கே தென் பெண்ணையாறு. இதனைப் பின்வரும் பாடலிற் காணலாம்.

-

மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்கா

மார்க்கு முவரி யணிகிழக்கு-பார்க்குளுயர்

தெற்குப் பினாகி திகழிருபதின் காதம் நற்றொண்டை நாடெனவே காட்டு.

o

இத் தொண்டை. நன்னாடுவயல்வளம் மிக்கது. வடக்கே வைணவத் திருப்பதிகளிற் சிறந்த திருப்பதியாம் திருப்பதிதிருவேங்கடமலை உளது. குலசேகரப்பெருமாள் தம் பெரு மாள் திருமொழியில் ஊனேறு என்த் தொடங்கும் பாசுரத்தில் திருவேங்கடமுடையான் விஷயமாகப் பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் அரம்பை 'யர்கள் சூழ அரசாளும் விண்ணுலகப் பதவியும், மண் னுலகச் சிறப்பும் வேண்டாது. திருவேங்கட மலையில் மறு பிறவியில் ஒர் மீளுய்ப் பிறக்கும் பேறு தமக்கு வேண்டும்' என்கிரு.ர். -

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனாற் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே.

நாலாயிரம்-பெருமாள் திருமொழி : 4:3

இன்றும் இந்தியாவிலேயே மிகுந்த பொருள் வருவாயும், பக்தர் குழாம் பரந்து செல்வதுமான பதி திருப்பதியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/92&oldid=554082" இலிருந்து மீள்விக்கப்பட்டது