பக்கம்:காரும் தேரும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டின் பெருமை 91

அடுத்து யாப்பருங்கலக் காரிகையில் மேற்கோள் செய்யுளாக ஒரு பாடல் வந்துள்ளது. அதில் 'உலகம் முழுவதும் ஒரு கழனி என்றும், அக்கழனியிலே விளை வயலாய் இருப்பன நாற்றிசைத் தேயங்கள் என்றும்,

அவ்விளை வயலில்-விளைந்த நீண்ட க ரு ம் பே தொண்டை வளநாடு என்றும், அக்கரும்பிலிருந்து பிழிந் தெடுக்கப்பட்ட சாறே அந்நாட்டில் அமைந்துள்ள

பேரூர்கள் என்றும், அச்சாற்றினைக் காய்ச்சி எடுத்த வெல்லக் கட்டியே காஞ்சிமா நகர்ப்புறம் என்றும் அக் கட்டி கொண்டு ஆக்கப் பெற்ற சருக்கரை மாமணியே கச்சியம்பதி என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கற்பனை சிறந்த கவினுறு பாடல் வருமாறு:

வையக மெல்லாம் கழனியா வையகத்துச் செய்யகமே காற்றிசையின் றேயங்கள் செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளங்ாடு வான்கரும்பின் சாறேயங் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்.

-

தொண்டைவள நாட்டின் தலைநகரம் காஞ்சிபுர மாகும். இந்தியாவில் உள்ள புண்ண யப் பதிகள் ஏழனுள் ஒன்றாகக் காஞ்சியினை வடமொழிப் புராணங்கள் கூறு கின்றன. புத்தர் தம் பெளத்த சமயக் கருத்துகளைக் காஞ்சியில் பரப்பியதாகச் சீன யாத்திரிகர் இயூன்சாங் குறிப்பிடுகின்றார். 100 அடி உயரமுள்ள அசோகத்துாண் ஒன்று காஞ்சியில் புத்த சமயக் கருத்துகள் பொறிக்கப் பெற்று விளங்கியது. நாளாந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக விளங்கிய தர்மபாலர் காஞ்சிபுரத் தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி இலக்கணப் புலவர் பதஞ்சலி தமது மா பாடியத்தில் காஞ்சியைக் குறிப்பிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/93&oldid=554083" இலிருந்து மீள்விக்கப்பட்டது