பக்கம்:காரும் தேரும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காரும் தேரும்

டுள்ளார். கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்' என்று ஒ. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். நகரேவு" காஞ்சி' என்பது வடமொழித் தொடர். தண்டியலங்காரத்தின் மேற்கோள் செய்யுளொன்று கடலைக்காட்டிலும் கச்சிக்குப் பெருமை உண்டென்று குறிப்பிடுகின்றது. எவ்வாறு ? காஞ்சியில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் கட வில் கிடைக்க மாட்டா; ஆனால் கடல்படு பொருள்கள் எல்லாம் காஞ்சியில் கிடைக்குமாம்.' இவ்வாறு கூறுகின்றார் தண்டியாசிரியர்,

மலிதேரான் கச்சியும் மாகடலுங் தம்மில் ஒலியும் பெருமையும் ஒக்கும் மலிதேரான். கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும்.

மேலும், இத் தொண்டை நாட்டில் திருவேங்கடத் தோடு திருமுருகன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக் கும் திருத்தணிகை, கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று மணிவாசகர் பாராட்டிய கண்ணப்பர் முத்தி பெற்ற திருக்காளத்தி, நல்ல மூலிகைக் காற்றின்ைக் கொண்டு உடலுக்கு உரமூட்டும் திருக்கழுக்குன்றம் முதலிய சிறப்புப் பொருந்திய மலைகள் உண்டு. பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, ஆரணியாறு, நிவா, கூவம் , அடையாறு முதலிய ஆறுகள் ஒடுகின்றன. புழலேரி, பழவேற்காட்டு ஏரி, செம்பரம்பாக்கத்தேரி, பூண்டி நீர்த்தேக்கம் முதலியன

தொண்டை மண்டலத்தை வள நாடாக்குகின்றன. இப் போதைய செங்கற்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு, சித்துார் மாவட்டங்காள அந் நாளையத்தொண்டை

மண்டலமாகும்? சைவத் திருப்பதிகள் முப்பத்திரண்டும் வைணவத் திருப்பதிகள் இருபத்திரண்டும் தொண்டை நாட்டிலுள்ளன, தமிழ் நாட்டின் டிராய் (Troy) நகரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/94&oldid=554084" இலிருந்து மீள்விக்கப்பட்டது